கிருமிகளிடமிருந்து தப்பிக்கணுமா? அப்போ இதை கொண்டு கழிவறையை சுத்தம் செய்ங்க!

405

நம் உடலை மட்டும் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் போதாது. வீட்டையும் சுத்தமாக வைத்துக்கொண்டால்தான் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

நாம் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களைத் தான் பயன்படுத்துகிறோம்.

ஆனால், பணம் இல்லாதவர்கள் வீட்டில், மாத கடைசியில் பணத்தட்டுப்பாடு ஏற்படும். அந்த சமயத்தில் சமையலறையையும், கழிவறையையும் சுத்தப்படுத்த இயற்கையான முறையில் சில யோசனைகள் சொல்கிறேன். நீங்கள் செய்து பாருங்கள். நிச்சயம் பயனடைவீர்கள்.

தரையிலுள்ள மஞ்சள் கறையை அம்மோனியா தான் மிகச்சிறந்த மருந்து. ஒரு வாளியில் சூடான தண்ணீரை ஊற்றி, அதில் ¼ கோப்பை அம்மோனியாவை கலந்து கழிவறையை சுத்தம் செய்தால் பளபளப்பாக, சுத்தமாக அழுக்குகள் நீங்கிவிடும்.

முதலில் தண்ணீரை கொண்டு உங்களுடைய கழிவறையை நன்றாக சுத்தம் செய்யவும். சமையல் சோடாவை 2 ஸ்பூன் எடுத்து சூடான தண்ணீரில் கலந்து கழிவறையை சுத்தம் செய்தால் பசைகள், அழுக்குகள் நீங்கிவிடும். கழிவறை பளபளப்புடன் இருக்கும்.

பேக்கிங் சோடாவை குளியலறையின் தரையில் தூவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவினால் குளியலறையின் தரை சும்மா பளிச்சுன்னு இருக்கும்.

எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. எனவே, இதன் சாற்றினை குளியலறையின் தரையில் தெளித்து, உடனே பிரஷ் கொண்டு தேய்த்துவிட்டால், கறைகள் நீங்கி குளியலறை நன்கு நறுமணத்துடன் இருக்கும்.

உப்பை தரையில் குளியலறையில் தூவி, சிறிது நேரம் கழித்து பிரஷ் கொண்டு தேய்த்து விட்டு, சுடுநீர் கொண்டு குளியலறையை சுத்தம் செய்தால் மஞ்சள் கறைகள் நீங்கி விடும்.

வினிகரை குளியலறையின் தரையில் ஊற்றி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சை சாற்றினை தெளித்து, பிரஷ் கொண்டு தேய்த்து விட்டு கழுவிவிட்டால் தரை பளிச்சென்று இருக்கும்.