ஏப்ரல் மாதம் முழுவதும் இந்த ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்! யாருக்கெல்லாம் ஆபத்து வரும்?

1226

இப்போது உலகம் இருக்கக் கூடிய சிக்கலான சூழ்நிலையில் நமக்கு இருக்கக் கூடிய ஒரே ஆறுதல் இதுபோன்ற ராசி பலன்களை படிப்பதுதான்.

இந்த ஏப்ரல் மாதம் சில ராசிக்காரர்களுக்கு நன்மையை தருகிறது.

சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
இந்த மாதம் உங்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகமாகும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். உங்க ராசியில் சூரியன் இந்த மாதம் உச்சமடைகிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும் ஒருவருக்கொருவர் அன்பும் அந்நியோன்னியமும் அதிகமாகும்.

சொந்த பந்தங்களை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரலாம் கவனமாக இருங்க. உணவு விசயத்தில் கவனமாக இருங்க.

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை சாப்பிடுங்க. வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். தொழில் துறையினர் எல்லாம் இந்த மாதம் கொஞ்சம் சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும் மாத பிற்பகுதியில் சவால்களை சமாளிப்பீர்கள். உங்களுக்கு இந்த மாதம் பண வருமானம் வரும். வேலைப்பளு அதிகரிக்கும். திறமையோடு பிரச்சினைகளை சமாளிப்பீர்கள்.

பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. பெரிய அளவில் முதலீடுகள் வேண்டாம். மாணவர்களின் திறமை வெளிப்படும். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வணங்குங்கள். இந்த மாதம் ஏப்ரல் 10 முதல் 12 வரை சந்திராஷ்டமம் நாட்கள் எச்சரிக்கையோடு இருங்கள்.

ரிஷபம்
இந்த மாதம் உங்களுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகமாகும். பொருளாதார ரீதியாக நீங்கள் லாபத்தை பெறுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடி வரும். நீங்க நினைத்தது நிறைவேறும் மாதம்.

ஆரோக்கியமான மாதமாக இருக்கப் போகிறது. சொந்த பந்தங்கள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். நேரம் காலம் பார்த்து பேசுங்கள் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்.

இந்த மாதம் சொத்துக்கள் எதையும் வாங்க முயற்சி செய்யாதீர்கள். வியாபாரம் லாபகரமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் எதுவும் வேண்டாம்.

வேலையில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். அதே நேரத்தில் யாரை நம்பியும் பெரிய அளவில் பணத்தை கடனாக கொடுக்க வேண்டாம். வேலையில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும் இடமாற்றம் வரும்.

ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 15 பிற்பகல் 1.57 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும்.

மிதுனம்
இந்த மாதம் உங்க ராசிக்கு சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தாலும் அதை எளிதில் சமாளிப்பீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வரலாம்.

நிதி நிலைமையில் சில பிரச்சினைகளும் நெருக்கடிகளும் வரலாம் என்பதால் இருக்கிற பணத்தை சிக்கனமாக இருங்கள். சுப முயற்சிகள் எதுவும் இந்த மாதம் வேண்டாம்.

சொந்த பந்தங்கள் வருகையால் வீடு களைகட்டும். பேச்சில் நிதானமாக இருங்கள் இல்லாவிட்டால் பிரச்சினைகள் வரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருங்க.

யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணத்தை கடனாக வாங்கி கொடுக்காதீங்க. வேலை செய்பவர்களுக்கு நிம்மதியான மாதம் இது. எதிர்பார்த்த இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.

மாணவர்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டு படிங்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கங்க அப்போதான் தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.

கடகம்
இந்த மாதம் உங்களுக்கு இந்த மாதம் ரொம்ப நல்ல மாதம். நல்ல பணவரவு இருக்கும். பெர்சனல் வாழ்க்கையில பிரச்சினைகள் வரப்போகுது. கவனமாக பேசுங்க. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்க நிதி நிலைமை இந்த மாதம் நல்லாவே இருக்கும்.

அரசு துறை, மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகம் வரும். சிலர் அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். வேலைகளை சிறப்பாக செய்வீங்க உயரதிகாரிகள் கிட்ட பாராட்டுக்களை வாங்குவீங்க. சிலருக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்.

மாணவர்களுக்கு நல்ல கல்லூரியில் உயர்கல்வி படிக்க வாய்ப்பு கிடைக்கும். உங்களின் நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும். எதையும் எடுத்து செய்யக்கூடிய திறமை அதிகமாகும்.

சொந்த பந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். வீட்டில் இருந்தே வேலை செய்தாலும் வேலைப்பளு அதிகமாகும். இந்த மாதம் திருமண பேச்சுவார்த்தைகள் வேண்டாம்.

அரசு துறையில் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். இந்த மாதம் 17ஆம் தேதி 12.17 முதல் 20 ஆம் தேதி 00.37 நிமிடம் வரை சந்திராஷ்டமம் உள்ளது கவனம் தேவை.

சிம்மம்
இந்த மாதம் சூழ்நிலை கொஞ்சம் சுமராகத்தான் இருக்கும். இப்ப இருக்கிற சூழ்நிலையில ரொம்ப அமைதியாக இருங்க.

மாத முற்பகுதியில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க வீட்ல யார் கிட்டையும் ரொம்ப கோபமாக பேசாதீங்க. வண்டி வாகனங்களில் வெளியே போகவே போகாதீங்க.

போனாலும் அடிதான் விழும் வீட்டுக்குள்ள இருக்கும் போதும் சண்டை சச்சரவு வீணான விவாதங்கள் வரும் கவனமாக பேசுங்க.

புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். எதிர்ப்பும் தடைகளும் ஏற்படும். மாத பிற்பகுதியில் பிசினஸ்ல நல்ல வெற்றிகள் கிடைக்கும் அதிர்ஷ்டம் தேடிவரும். புதிய வேலைகள் கிடைக்கும். மனதளவில் தளர்ச்சி அடையாதீங்க எதையும் நின்னு நிதானித்து யோசித்து முடிவு பண்ணுங்க.

குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க.

ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருங்க. வண்டி வாகனங்களில் வெளியே போகாதீங்க.

கன்னி
இந்த மாதம் உங்களுக்கு ரொம்ப நல்லதாகவே நடக்கும். பண வருமானம் வரும். திடீர் அதிர்ஷ்டம் வரும். உங்க வாழ்க்கை துணை மூலம் உதவி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில உதவியாக இருப்பாங்க. அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

சில நாட்களிலேயே உங்க ராசி அதிபதி புதன் ஏழாம் வயிற்றில் சில பிரச்சினைகள் வரும் கவனமாக இருங்க. சத்தான சாப்பாடா சாப்பிடுங்க. எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிக்கலாம். வெளியே எங்கேயும் பயணம் வேண்டாம். சில குழப்பங்கள் வரலாம்.

எந்த முடிவு எடுப்பதற்கு முன்னாடியும் ஒருதடவைக்கு இரண்டு தடவை தெளிவா பேசி முடிவு பண்ணுங்க. திருமணம் சார்ந்த பேச்சுவார்த்தைகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும்.

அடுத்துவர் விசயங்களில் தேவையின்றி தலையிட வேண்டாம். அதுவே உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும். வெளிவட்டார தொடர்புகள் அதிகமாகும். ஆன்மீக விசயங்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். கவுரவ பதவிகள் சிலருக்கு தேடி வரும். இந்த மாதம் ஏப்ரல் 22 பகல் 1 மணி முதல் ஏப்ரல் 25 பின் இரவு 01.15 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க.

துலாம்
இந்த மாதம் உங்களுக்கு சுகங்களும் சந்தோஷங்களும் கிடைக்கும். பணம், விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்திருங்கள். எதிர்பார்க்காத பலன்கள் தேடி வரும். அறிமுகம் இல்லாத நபர்கள் கூட உதவிகள் செய்வார்கள்.

நீங்க இந்த மாதம் உங்க உடல் ஆரோக்கியத்தில அதீத அக்கறை செலுத்துங்க. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

தொழிலில் வேலையில் மாற்றங்கள் வரலாம். நல்ல வேலையாக இருந்தா மட்டுமே மாற பாருங்க. திருமண பேச்சுவார்த்தை எதுவும் வேண்டாம் காரணம் அதற்கான சாதகமான நேரம் இல்லை. மாத பிற்பகுதியில் நிறைய லாபம் கிடைக்கும்.

முடிஞ்சவரைக்கும் நல்லா ரெஸ்ட் எடுங்க அது மட்டும்தான் உங்களுக்கு நல்லது. நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க அடுத்தவங்க விசயத்தில தலையிடாதீங்க. நிறைய சவால்களை சந்திக்க தயாராகுங்கள். வலிகளையும் சமாளிக்க பழகுங்கள். முக்கிய முடிவுகள் எதுவும் வேண்டாம். ஏப்ரல் 25ஆம் தேதி அதிகாலை 1.15 மணி முதல் ஏப்ரல் 27 பகல் 11.45 மணிவரைக்கும் சந்திராஷ்டம் உள்ளதால் கவனமாக இருங்க வண்டி வாகனங்களில் பயணம் செய்யாதீங்க.

விருச்சிகம்
இந்த மாதம் நீங்க மனதளவில் ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. உங்க லைப் பார்ட்னர் மூலம் ரொம்ப நல்ல உதவி கிடைக்கும்.

இந்த மாதம் திருமணம் பேச்சுவார்த்தை நடக்கலாம். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வீட்டிலேயே இருக்கும் லைப் பார்ட்டனர் மூலம் உதவி கிடைக்கும் நிறைய நல்லது நடக்கும். குடும்பத்தில இருந்த பிரச்சினைகள் தீரும்.

உங்க சகோதரர்கள் மூலம் நிறைய நன்மைகள் நடக்கும். தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும்.

உங்க பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும் பணம் உங்களுக்கு வேற வழிகளில் விரைய செலவாகும். கடன்களை அடைக்கலாம். 14ஆம் தேதி சூரியன் உச்சமடைகிறார்.

ஆறில் சூரியன் உச்சமடைவது நன்மை. நல்ல பாசிட்டிவ்தான். வேலையில் மிகப்பெரிய மாற்றம் கிடைக்கும். தைரியமும் ஆற்றலும் அதிகமாகும். இந்த மாதம் பங்குச்சந்தை முதலீடுகள் எதுவும் தேவையில்லை. நீங்க எந்த செயலையும் செய்யும் முன்பாக யோசித்து முடிவெடுங்கள்.

இந்த மாதம் 31-03-2020 காலை 06.05 மணி முதல் 02-04-2020 பகல் 01.33 மணி வரைக்கும் மற்றும் 27-04-2020 பகல் 11.45 மணி முதல் 29-04-2020 இரவு 07.57 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த நான்கு நாட்களும் அமைதியாக இருங்க வீண் பேச்சுகள் வேண்டாம்.

தனுசு
ஏப்ரல் மாதம் உங்களுக்கு பணவரவு அதிகமாகும். நிதி நிலைமையில் வலிமையான மாதமாக இருக்கும். குடும்ப உறவினர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். வருமானத்திற்கு புதிய வழி பிறக்கும். இதனால் உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகமாகும்.

எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும். சுகங்கள் தேடி வரும். புதிய வெற்றிகள் தேடி வரும். எதையும் போராடி வெற்றி பெறுவீர்கள். வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு மாத பிற்பகுதியில் நல்ல வேலை கிடைக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். நன்மைகள் தேடி வரும். குடும்பத்தில் சந்தோஷங்களும் கூடும்.

கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் நீங்கும். வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் மாத பிற்பகுதியில் வாஸ்து செய்யலாம். உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம் உணவு விசயத்தில் கவனமாக இருங்க. இந்த மாதம் கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டிய மாதம். பிசினஸ் செய்பவர்களுக்கு மாத பிற்பகுதியில் லாபம் கிடைக்கும்.

கடன் பிரச்சினைகள் குறையும். ஏப்ரல் 2ஆம் தேதி பகல் 1.33 மணி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 05.08 மணிவரைக்கும், ஏப்ரல் 29ஆம் தேதி இரவு 7.57 மணி முதல் 2 நாட்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும்.

மகரம்
இந்த மாதம் உங்களுக்கு சாதகமான மாதம் யோகங்கள் நிறைந்த மாதம். மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம்.

பெர்சனல் வாழ்க்கையில இந்த மாதம் நிறைய மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு மன அழுத்தங்கள் இருந்தாலும் தன்னம்பிக்கையால் அதை வெல்வீர்கள்.

எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வேலையில மாற்றங்கள் வேண்டும் என்று நினைப்பவர்கள் மாத பிற்பகுதியில் முயற்சி செய்யலாம்.

நல்ல வேலை கிடைக்கும். வேலையில் நிம்மதி கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும். விஆர்எஸ் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான முயற்சி செய்யலாம். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். நீங்க பிசினஸ் பண்ணுங்க நல்லதே நடக்கும்.

அதே நேரத்தில் பெரிய முதலீடுகள் எதுவும் இந்த மாதம் வேண்டாம். டென்சன் அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் பயணங்களை ஒத்திப்போடுங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. இந்த மாதம் ஏப்ரல் 4 மாலை 05.08 மணி முதல் ஏப்ரல் 06 மாலை 5.32 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருங்க.

கும்பம்
இந்த மாதம் உங்களுக்கு நிறைய விரைய செலவுகள் ஏற்படும். ரொம்ப கவனமாக இருங்க. சிக்கனமாக செலவு பண்ணுங்க. உங்களுக்கு சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். உங்க உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க.

இந்த மாதம் உங்களுக்கு வங்கிக்கடன்கள் கிடைக்கலாம் ஆனால் கடன் கிடைக்கிறதே என்று வாங்கி போடாதீங்க. உங்க ஆயுள் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்யும் போது கவனமாக இருங்க. எந்த புதிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்து போடாதீங்க.

இந்த மாதம் புதிய தொழில்கள் எல்லாம் வேண்டாம். பயணம் செய்ய வேண்டாம் பாதிப்புகள் வரலாம். இந்த நேரத்தில எந்த புது வேலைக்கும் மாறாதீங்க.

பூமி சார்ந்த விசயங்களில் பிரச்சினைகள் வரலாம் எச்சரிக்கையாக இருங்க. பொருளாதார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுக்கும் போது யோசித்து எடுங்க.

குடும்ப விசயத்தில விட்டுக்கொடுத்து போங்க. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். மாணவர்கள் இந்த மாதம் கவனமாக இருங்க மேல்நிலை கல்வியை தேர்வு செய்யும் போது கவனமும் பெரியவர்களின் ஆலோசனையும் தேவை. வீட்டோட ரெஸ்ட் எடுங்க வெளியே போய் யார் கிட்டையும் வம்பு வச்சிக்காதீங்க. ஏப்ரல் 6 மாலை 5.32 மணி முதல் ஏப்ரல் 08 மாலை 04.33 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும்.

மீனம்
இந்த மாதம் உங்களின் நிதி நெருக்கடிகள் தீரும். பணவரவு காரணமாக மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். பிள்ளைகளுக்காக நீங்க நிறைய முதலீடுகள் பண்ணலாம். உங்களால் பிள்ளைகளுக்கு நன்மைகள் நடக்கும்.

நீங்க ரொம்ப சந்தோஷமாக இருப்பீங்க. உங்க உடன் பிறந்தவர்கள் மூலம் நிறைய லாபம் கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். திடீர் பண வருமானம் வரும். வியாபாரத்தில் நிறைய லாபம் வரும். வங்கியில் கடன் கிடைக்கும்.

திருமண பேச்சுவார்த்தைகள் மாத பிற்பகுதியில் தொடங்கலாம். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வீடு கட்ட வாஸ்து செய்யலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் பற்றி யோசிக்கலாம். நிறைய பாசிட்டிவ் எண்ணங்கள் உருவாகும். வீட்டில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் பேசும் போது கவனமாக பேசுங்க. கோபத்தை கட்டுப்படுத்துங்க. சொந்த பந்தங்களை அனுசரித்து போங்க. அடுத்தவங்க விசயத்தில தலையிடாதீங்க. திருமண சுப காரியங்கள் கூடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை மாறும்.

வியாபாரத்தில் மறைமுகமான எதிர்ப்புகள் அதிகமாகும் என்றாலும் சரக்குகள் விற்றுத்தீர்ந்து லாபம் கிடைக்கும்.