வாரம் ஒருமுறை இதை செய்தாலே போதும்.. பற்களின் பின்புறம் உள்ள மஞ்சள் கறை ஓடி போய்விடும்

667

பொதுவாக தினமும் காலையில் எழுந்து பற்கள் விலக்கும் பலரும் பற்களின் முன்புறத்தில் இருக்கும் கரையை நீக்குவதில் மட்டும் அக்கறை எடுத்துக் கொள்வதுண்டு.

இதேவேளை பற்களின் பின்புறத்தில் இருக்கும் கரையை மறந்துவிடுவதுண்டு.

இதனால் பற்களின் பின்புறத்தில் மஞ்சள் கறைகள் சேர்ந்து நமது வாயின் ஆரோக்கியத்தை முற்றிலும் பாதித்து விடுகிறது.

இதனை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. இல்லாவிடின் பல்வலி, ஈறுகளில் இரத்த கசிவு போன்றவற்றை எளிதில் ஏற்படுத்தி விடுகின்றது.

எனவே பற்களின் பின்புறம் இருக்கும் மஞ்சள் கறைகளைப் போக்குவதற்கு ஓர் எளிய முறை ஒன்றை இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • பேக்கிங் சோடா – 2 டீஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • ஆப்பிள் சீடர் வினிகர் – 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
  • டூத் பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • அலுமினியத்தாள்
செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பவுலில் போட்டு பேஸ்ட் போல் கலந்துகொள்ளவும்.

அந்தக் கலவையை அலுமினியத் தாளை விரித்து அதில் பரப்பியவாறு வைக்கவும். பின் அதை அப்படியே எடுத்து பற்களை சுற்றிலும் ஒட்டிவிட வேண்டும்.

2 நிமிடங்கள் கழித்து நீக்கிவிட்டு பிரெஷ் கொண்டு தேய்த்துவிட்டு வாயை வெந்நீரால் கொப்பளித்தால் பற்களில் உள்ள கறை குறைந்திருக்கும். முழுமையாக நீங்க இதை வாரம் ஒருமுறை செய்யவும்.