வெங்காயத்தை இரண்டாக வெட்டி அந்த இடத்தில் வைத்தால் ஒரே இரவில் பல நன்மைகள் கிடைக்குமாம்!

914

நமக்கு பல்வேறு நன்மைகளைத் தரும் உணவுப் பொருட்களில் ஒன்று இந்த வெங்காயம். உரிக்க உரிக்க ஒன்றுமில்லைனு சொல்லுவாங்க. நெறய இருக்குங்க. வெங்காயம் உணவிற்கு மட்டுமில்லாது நமது உடல் ஆரோக்கியத்திற்கும் பல்வேறு விதங்களில் நன்மை அளிக்கிறது.

வெங்காயத்தை இரண்டாக வெட்டி அந்த இடத்தில் வைத்தால் ஒரே இரவில் பல நன்மைகள் கிடைக்குமாம்!

நமது உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க வைப்பதே இந்த வெங்காயம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. தலைமுடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து வர முடி உதிர்வது நின்று அந்த இடத்தில் மீண்டும் முடி வளரும் இது பலராலும் நம்பப்படுகிறது.

தலையில் பொடுகு பிரச்சனை அதிகம் உள்ளவர்கள் வெங்காயத்தை தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லை மறைந்துவிடும். பொடுகு தொல்லையால் இந்த முடி உதிர்வு பிரச்சனை இருக்கும்.

மேலும் பெரிய வெங்காயத்தை இரண்டு சிறு துண்டுகளாக வெட்டி இரவில் தூங்கும் போது நமது பாதத்தில் வைத்து வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. நாம் சாக்ஸ் அல்லது சிறு கயிறு பயன்படுத்தி எப்போதும் இரவில் பாதத்துடன் ஒட்டி இருக்குமாறு செய்யலாம்.

வெங்காயத்தை இவ்வாறு நமது பாதத்தில் வைப்பதால் நமது உடலில் இருக்கும் நச்சுக்கள் இந்த வெங்காயம் மூலமாக உறிஞ்சப்படுகிறது, மேலும் இரத்தம் சுத்தம் செய்யப் படுகிறது. நம் உடல் கிருமிகளின்றி சுத்தமாக இருக்கும்.காய்ச்சல் இருந்தால் விரைவில் குணமாக இந்த முறை பயன்படுகிறது.

வெங்காயத்தை இரண்டாக வெட்டி அதனை பாதத்தின் அடியில் வைத்து காலுறை அணிந்துகொள்ளவும். ஒரு நாள் இரவு அப்படியே விட்டு விடுங்கள்.. இதே போன்று சில இரவுகள் செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது அனுபவ பூர்வமான உண்மை.வெங்காயத்தை இரண்டாக வெட்டி அந்த இடத்தில் வைத்தால் ஒரே இரவில் பல நன்மைகள் கிடைக்குமாம்!